Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஏப்.,26ல் மிரட்ட வருகிறது “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்”

April 4, 2019
in Cinema
0

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஸ்டைபர் மேன், சூப்பர் மேன், அயர்ன் மேன், தோர், ஹால்பாய், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், என ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த படங்கள் தான் அவெஞ்சர்ஸ் வரிசை படங்கள்.

இந்த பிரபஞ்சத்தையே ஆள வேண்டும் என்றால் அதற்கு இன்பினிட்டி ஸ்டோன் எனப்படும் 5 மந்திர கற்களை எடுக்க வேண்டும். அதற்கான போராட்டம் தான் கடைசியாக வெளிவந்த இன்பினிடி வார் பாகத்தில் இடம்பெற்றது. வில்லன் தானோஸ் பெரும்பாலான சூப்பர் ஹீரோக்களை அழித்து விட்டு பலம் பொருந்தியவனாக நிற்கிறான்.

தற்போது வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில், மீதி சூப்பர் ஹீரோக்கள் தானோசை வெல்கிறார்களா? என்பதுதான் கதை. இப்போது கேப்டன் மார்வெல் என்ற பெண் சூப்பர் ஹீரோயினும் இந்த போராட்டத்தில் இணைகிறார்.

இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமிற்கு பெரும் வரவேற்பு இருப்பதால் அதன் புரமோசன்களை பெரிய அளவில் செய்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான், அவெஞ்சர்ஸ் ஆன்தெம் வெளியிட்டு அவரே பாடி, ஆடியிருக்கிறார். இதன் தமிழ் டப்பிங்கில் தமிழின் முன்னணி நடிகர், நடிகைகள் குரல் கொடுக்க இருக்கிறார்கள். கோடை விடுமுறையை குறிவைத்து வருகிற 26ந் தேதி வெளிவருகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்டத்திலும் படம் வெளிவருகிறது.

Previous Post

செக்மோசடி வழக்கில் சிக்கியது எப்படி? மோகன்பாபு விளக்கம்

Next Post

தயாரிப்பாளர் ஆனது ஏன்? அமலாபால் விளக்கம்

Next Post

தயாரிப்பாளர் ஆனது ஏன்? அமலாபால் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures