அலரி மாளிகையில் பணிபுரிந்த STF வீரரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் சோதனைச் சாவடியில் இன்று முற்பகல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
31 வயதுடைய குறித்த STF வீரர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

