நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி நியமித்துள்ள விசேட குழு கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

