அட்லி இயக்கத்தில் விஜய் நடிதது வரும் 63வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், யோகிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் சிறப்பு தோற்றத்தில் போலீசாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த செய்திக்கு விஜய் படக்குழு உடனடியாக மறுப்பு வெளியிட்டுள்ளது. அதில், விஜய் படத்தில் ஷாரூக்கானை நடிக்க வைக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளனர்.

