தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சமந்தா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் பிரியர் ஷோ நேற்று இரவு திரையிடப்பட்டது. படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்களே வந்துள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள விமர்சனத்தில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கம் மற்றும் சமந்தாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
மேலும் பல விமர்சகர்களும் சமந்தாவின் வேம்பு கேரக்டரை குறிப்பிட்டு, அவர் துணிச்சலாக எடுத்து நடித்ததை சொல்லி பாராட்டியுள்ளனர். இதையடுத்து திரையுலகினர் மத்தியிலும் சமந்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

