பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் – ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, இங்கிலாந்து நடிகை டெய்சி ஆகியோர் நடிக்கின்றனர். ரம்யா கிருஷ்ணனும் முக்கியமான ஒரு ரோலில் நடிக்க உள்ளார்.
இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் ஆலியாபட் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இப்படம் சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகி வருகிறது. அந்த வகையில், இந்த படத்திற்காக அந்தக்கால அரண்மனைகள், அன்றைய கட்டங்கள் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்களுக்கான செட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. குறிப்பாக அரண்மனை தோற்றம் கொண்ட பிரமாண்ட செட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

