Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் எழுதிய நியூயார்க் டைம்ஸ்

March 29, 2019
in Cinema
0

இந்திய சினிமாவின் வளர்ச்சி கடந்த சில வருடங்களில் உலக அளவில் பரந்து விரிந்து வருகிறது. இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமாதான் என்பது முன்னர் இருந்தது. அதை சமீபகால தமிழ், தெலுங்கு படங்கள் முறியடித்து வருகின்றன.

உருவாக்கம், கதை சொல்லல், நடிப்பு என சில விஷயங்களில் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் சில சிறந்த திரைப்படங்கள் வருகின்றன. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்கள் என யாரையும் மனமுவந்து குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

ஆனாலும், தன் முதல் படமான ‘ஆரண்ய காண்டம்’ படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்ற தியாகராஜன் குமாரராஜா, அவரது இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக இருப்பார் என்று இன்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அதன் எதிரொலியாக அமெரிக்காவின் புகழ் மிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ் அதன் இணையதளத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. வணிகரீதியிலான இந்தியப் படங்களில் பாலியல் என்பது இன்னும் வெளிப்படையாக காட்டப்படாத நிலையில், இந்தப் படத்தில் அது உணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. தனித்துவமான ஒரு படம் சூப்பர் டீலக்ஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Previous Post

ஆர்.ஆர்.ஆர்.,க்காக உருவாகும் பிரம்மாண்ட செட்

Next Post

கோவை சம்பவம் ; நல்ல தமிழகமாக இருக்காது : கமல்

Next Post

கோவை சம்பவம் ; நல்ல தமிழகமாக இருக்காது : கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures