Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிவேக நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை

March 28, 2019
in News, Politics, World
0

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும். புதிய கொடுப்பனவு மூலம் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும் இந்த வசதி தற்பொழுது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் உண்டு. ஜாஎல சீதுவ கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1969 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும். கொழும்பு சுற்றுவட்ட வீதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளியேறும் பகுதியில் பணம் செலுத்தி பயணிக்கும் பொழுது மணித்தியாலத்துக்கு 250 வாகனங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மணித்தியாலத்துக்கு 1250 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறக்கூடியதாக இருக்கும். பண்டிகை காலத்திலும் அலுவலக நேரத்திலும் ஏற்படும் நெருக்கடி நிலையின்போது நிலவும் கியூ வரிசைக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் என்று பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமனம்

Next Post

மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளாகியுள்ளேன் – சரத் பொன்சேகா

Next Post

மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளாகியுள்ளேன் – சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures