பொதுவாக திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களுக்கு புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகுச்சிலை நிறுவப்படுவது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. சமீபத்தில் கூட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச்சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக மெழுகுச்சிலை ஆக மாறும் பாக்கியம் பெற்றுள்ளார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு..
இவரது மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இடம்பெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த சிலை ஐதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் ஏ.எம்.பி சினிமாஸ் வளாகத்தில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது அதன்பிறகு இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறது..
இந்த சிலை திறப்பு விழாவில் மகேஷ்பாபு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். முதன்முறையாக மேடம் டுசாட்ஸ் மியூசியம் தங்களது ஸ்டுடியோவுக்குள் அல்லாமல் வெளியே சிலை திறப்பு விழாவை நடத்துவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவை பொறுத்தமட்டில் நடிகர் பிரபாஸ்க்கு பிறகு, மெழுகுச்சிலை அமைப்பது நடிகர் மகேஷ் பாபுவிற்கு என்பது குறிப்பிடத்தக்கது.

