கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தியதையும், பல உயிர்களை காவு வாங்கியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.. இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் மலையாளத்தில் தற்போது வைரஸ் என்கிற படம் உருவாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு இயக்குகிறார். இந்தப்படத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குனர் சித்தார்த் சிவா, இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி. இந்தப்படத்தில் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

