இந்தியாவிற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்தியாவிற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கு முன்னரும் இதுகுறித்து நாம் பலமுறை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

