Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

24 ஈழ அகதிகள் தமிழகத்தில் இருந்து ஈழம் திரும்பவுள்ளனர்

March 26, 2019
in News, Politics, World
0

தமிழகத்திலிருந்து 24 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாளையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் இவர்கள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.

விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்புகின்றவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

அவர்களை அவர்களது மாவட்டங்களிலேயே மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Previous Post

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்கு

Next Post

இந்தியா – தலைமன்னார் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்!

Next Post

இந்தியா – தலைமன்னார் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures