கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகள் மீளாய்வு நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினத்தில் இந்த பெறுபேறு மீளாய்வு நடவடிக்கை நிறைவடையவுள்ளதாகவும், இப்பணிகள் நிறைவடைந்தவுடன் பெறுபேறுகளை வெளியிட முடியுமாகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்ற இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தம் 656641 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

