Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!

March 20, 2019
in News, Politics, World
0
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றது.
நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த அறிக்கைக்கு இலங்கை சார்பில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, குறித்த அறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளார்.
ஐ.நா. பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட திலக் மாரப்பன, காணாமல்போனோர் அலுவலகம் செயற்பட்டு வருகின்றமை தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை செயற்படுத்துவது தொர்பாக தற்போது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டத்தை கொண்டுவருவது தொடர்பான செயற்பாடுகள் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக இவ்வருட வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இதன்போது கருத்து வெளியிட்ட திலக் மாரப்பன,
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இலங்கை காணப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான புதைகுழிகள் இனிவரும் காலத்திலும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் அதனை வேறு விதமாக சித்தரிக்க முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்காக வெளிநாட்டு பிரஜைகளை உள்வாங்க இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை. அவ்வாறாயின் இலங்கை அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
Previous Post

அவுஸ்திரேலியக் கடற்கரையில் அதிசய மீன்

Next Post

பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்த ஆணொருவரின் சடலம்

Next Post

பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்த ஆணொருவரின் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures