Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வாள்வெட்டு

March 20, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார்ச் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கார் சாரதியாக இருக்கும் ரஜீவ்குமார், யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார்.யாழ்ப்பாண நகரில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போது ரஜீவ்குமார் செலுத்திய காரை, கறுப்பு நிற கார் ஒன்றில் வந்தவர்கள் இடை மறுத்துள்ளன.

அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

படுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

வெட்டுக்காயங்களுடன் இரு பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Next Post

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பண்டம் எடுப்பு

Next Post

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பண்டம் எடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures