கமல் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின், இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை. லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
கமலின் இந்தியன் தாத்தா கெட்-அப் ஷங்கருக்கு திருப்தி அளிக்காததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அரசியலுக்காக முறுக்கு மீசை வைத்திருந்த கமல், அதை எடுத்திருந்தார். இதற்கிடையில் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடால் படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை லைகா நிறுவனம் மறுத்து அறிக்கை வெளியிட்டது. சென்னை மேமோரியல் ஹாலில் படப்பிடிப்பு நடந்து வருவதாக சொன்னது.
தற்போது பார்லிமென்ட் மற்றும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கமல் தொடங்கிய மக்கள் நீதி மையக் கட்சி, தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வில் கமல் பிசியாக இருக்கிறார். அதோடு, கமல் தென்சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் தெரிகிறது. இதனால் வருகிற 2 மாதங்களும் கமல் முழுக்க முழுக்க தேர்தல் பணியில் இருக்கப்போகிறார். இதனால் இந்தியன் 2 மீண்டும் தள்ளிப்போகிறது.
கமல் கட்சி தொடங்கிய பிறகு அவர் எதிர்பார்த்த மாதிரியான மாற்றங்கள் அரசியலில் நடக்கவில்லை. இதனால் கமல் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையின் இந்தியன் 2வில் அவரால் கவனம் செலுத்தி நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 டேக்-ஆப் ஆவதில் தொடர்ந்து பல்வேறு தடங்கல்கள் உருவாகி வருகின்றன.

