அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத் தலைநகர் ஃபீனிக்ஸுக்கு அருகே உள்ள விலங்குத் தோட்டத்தில் Selfie எடுக்க முயன்ற பெண்ணைச் சிறுத்தைப் புலி தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.
கைத்தொலைபேசியில் பதிவான காணொளியில், Selfie எடுக்க பெண் ஒருவர் சிறுத்தைப் புலி இருந்த கூண்டின்மேல் ஏறுவது தெரிகிறது.
அப்போது அவரின் கையை சிறுத்தைப் புலி அதன் நகங்கள் கொண்டு தாக்கியது.
சிறுத்தைப் புலியின் கவனத்தைத் திசைதிருப்ப மற்றொரு பெண் தமது தண்ணீர் போத்தலைக் கூண்டிற்குள் வீசினார்.
அதைத் தொடர்ந்து சிறுத்தைப் புலி போத்தல் பக்கம் சென்றது.
தாக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
அதன் பிறகு விலங்குத் தோட்டத்துக்குத் திரும்பிய அவர் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
சிறுத்தைப் புலிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. விசாரணை தொடர்கிறது.

