நடிகர் பிருத்விராஜ் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு என ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பிருத்விராஜ், நீண்ட நாட்கள் கழித்து வழக்கமான கலகலப்பான ஜனரஞ்சகமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் பிரதர்ஸ் டே.
இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார் நகைச்சுவை நடிகர் கலாபவன் சாஜன். ரஜினியின் 2.O படத்தில் அமைச்சராக நடித்தவர் இவர்தான். இந்த பிரதர்ஸ் டே படத்தின் துவக்கவிழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் பிருத்விராஜ், நடிகைகள் ஐஸ்வர்ய லட்சுமி, பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, பிரபல இயக்குனர் நாதிர்ஷா இசையமைக்கிறார்.

