பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சசி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் கதாநாயகிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த லிஜிமோல் மற்றும் காஷ்மீரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதில் சித்தார்த் ஜோடியாக, ஜி.வி.பிரகாஷின் தங்கையாக நடிக்கிறார் லிஜிமோல். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மகேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டளைகளை கிருத்திக் ரோஷன் ஆகிய படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தவர் தமிழில் இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமாகிறார்.

