அரசாங்கத்தை கொண்டு நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் வரப் பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சுமுகமான பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

