Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரவு- செலவுத்திட்டம் -பாராளுமன்றத்தில் நேற்று நடந்தவை

March 6, 2019
in News, Politics, World
0

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலரும் இன்று குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்றம் நேற்று ற்பகல் 2 மணிக்கு கூடியது.

செங்கோல் கொண்டுவருவதற்கு முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் வருகை தந்ததுடன், ஆளும் கட்சியின் பலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வருகை தந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ செங்கோல் கொண்டு வந்ததன் பின்னரே வருகை தந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கையில் கட்டுடன் சபைக்குள் வந்திருந்தார். சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் தொண்டமன் எம்.பியும் அவருடைய ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நீண்ட நேரமாக அளவளாவிக்கொண்டிருந்தனர்.

தொண்டமான் எம்.பி யின் இடது கையில் கறுப்புத் பெண்டேச் கட்டியிருந்ததை அவதானித்த பல எம்.பிக்களும் அவரிடம் குசலம் விசாரித்தனர். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கையை காண்பித்து தொண்டமானிடம் ஏதோ வினாவினார்.

புன்னகையுடன் நிதி அமைச்சர்

இந்நிலையில் மக்களை வலுவூட்டல், ஏழைகளை பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர சபைக்குள் பிரவேசித்த போது சபையிலிருந்து ஆளும் கட்சியினர் மேசைகளில் கைகளால் தட்டி வரவேற்றனர். தன்னுடைய ஆசனத்திற்கு வந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய கையிலிருந்த கறுப்பு நிறத்திலான பையை தூக்கி காண்பித்துகொண்டு சிரித்துகொண்டே ஆசனத்தில் அமர்ந்தார். இதன் பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தாமதித்தே சபைக்குள் வந்தமர்ந்தனர்.

சந்திரிக்காவும் – வெளிநாட்டு தூதுவர்களும்

இன்றைய வரவு செலவு திட்ட அமர்வுகளுக்கு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், இலங்கை முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் எள பலர் வருகைதந்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தார். இதன் பின்னர் நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையினை ஆரம்பித்தார்.

இதன்போது கடந்த கால ஆட்சியின் மோசடிக்கார வேலைத்திட்டங்கள், மற்றும் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டம் என்பன குறித்த தனது விமர்சனக் கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

தனியார் துறைக்கான இடம்

அதேபோல் தனியார் துறை சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அதிகமான இடங்களில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து பேசிய நிதி அமைச்சர், மஹிந்த ராஜபக் ஷ எப்போதும் இராணுவத்தை காட்டியே ஆட்சி நடத்துகின்றார், இராணுவம் இல்லையென்றால் இவர்களின் அரசியல் இல்லாமல் போய்விடும். அவ்வாறு இராணுவம் பற்றி பேசும் இவர்கள் இராணுவத்தின் நலன்களுக்காக எந்தவொரு கொடுப்பனவுகளையும், சலுகைகளையும் செய்யவில்லை என கூறினார். இந்தக் கருத்துக்களை அவர் முன்வைக்கும் போது எதிரணியில் மஹிந்த தரப்பில் இருந்த அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நாய்களுக்கும் பாதுகாப்பு

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திகளுக்கு, மக்களுக்கு மட்டும் அல்லாது நாய்களுக்கும் நிவாரணங்களை வழங்குகின்றோம். இந்த யோசனையை கேட்டதும் நிமல் சிறிபாலடி சில்வாவின் மனைவி அதிகமாக சந்தோஷப்படுவார் எனக் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தின் போது புதுமணத் தம்பதிகள் தங்களுடைய கனவை நனவாக்கிக் கொள்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் கடன் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவித்தார். இதன்போதும் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் கேலியாக விமர்சித்ததை அடுத்து மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் பெயரை குறிப்பிட்டு அவ்வாறான நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டவாறு சிரித்தார்.

அந்த 24 போரையும் அணிப்புவீர்களா

மேலும் சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு யோசனை ஒன்றும் அவரால் முன்வைக்கப்பட்டது. அதாவது போதைப்பொருள் பாவனையில் கைதாகிய நபர்கள் விடுபடும் போது அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக வெளியேறுகின்றனர். ஆகவே அவ்வாறு கைதான நபர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களை அமைத்து அவர்களுக்கு நன்னடத்தை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த சிலர் ” அந்த 24 பேரையும் அனுப்புவீர்களா? ” என கேள்வு எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, அவ்வாறு இருப்பார்களானால் அவர்களையும் அனுப்புவோம் என்றார்.

பலர் வெளியேறினர்

வரவு-செலவுத்திட்ட யோசனையை பிற்பகல் 2 .10 மணிக்கு வாசிப்பதற்கு ஆரம்பித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய உரையை மாலை 4.20க்கு நிறைவுக்கு நிறைவு செய்தார். அவரது உரை ஆரம்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சியின் அனைவரும் மேசைகளை தட்டி அவரது முன்மொழிவுகளை ஆதரித்தனர். எனினும் சற்று நேரம் கடக்கையில் ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் ஒருவர் இருவராக வெளியேறி பாதி ஆசனங்கள் காலியானது. அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடை நடுவே வெளியேறினர். வரவு செலவு திட்ட உரையினை எதிர்க்கட்சி தலைவரும் முழுமையாக சபையில் இருந்து கேட்கவில்லை. அவரும் வெளியேறியிருந்தார்.

வரவு செலவு திட்ட உரை நிறைவடைந்த பின்னர் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர்களுக்கான உணவறையில் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த- பிரதமர் ரணில், நிதி அமைச்சர் – தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரதமர் ரணில் -மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கூடி பேசிக்கொண்டனர்.

Previous Post

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம்

Next Post

இலங்கையை பாராட்டிய பிருத்தானியா

Next Post

இலங்கையை பாராட்டிய பிருத்தானியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures