Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஜெனிவாவில் தமிழர் தரப்புகள்

July 5, 2016
in News, Politics
0
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஜெனிவாவில் தமிழர் தரப்புகள்

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஜெனிவாவில் தமிழர் தரப்புகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்ற வாக்குறுதியை தமது வாக்கு வங்கியாகிய சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இச்செயற்பாடுகள், பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றதுஎன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை திறக்க வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழர் பிரதிநிதிகள் ஜெனிவாவில் சுட்டிக்காட்டினர்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க, உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டனர்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை தமிழர் பிரதிநிதிகள் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனாமானதும் பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்குசர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே காரணத்திற்காகவே, பொறுப்புக்கூறல் தொடர்பான உள்ளக விசாரணையை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் தொடர்பில் சர்வதேச பங்களிப்பை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகிறார்கள்.

இருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக இச்சபையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, ஏறத்தாழ ஒரு உள்ளகப் பொறிமுறையினையே வலியுறுத்துவதுடன் அதில் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தது.

இப்படியாக, குறிப்பிடத்தக்க தளர்வு போக்கை இலங்கை அரசுக்கு, மனித உரிமைகள் பேரவை வெளிப்படையாக காட்டியிருந்த போதிலும், அரசாங்கமானது சர்வதேச பங்களிப்பை கோருகின்ற பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து பின்வாங்கிச் செல்வதில் மிகமுனைப்புடன் செயற்படுகின்றது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் தொடர்பாக இந்த அவைக்கு எந்த ஒரு வாக்குறுதியை வழங்கினாலும், அரசில் அவரைவிட பொறுப்பும் அதிகாரமும் மிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்களே இந்த அவைக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிராகரித்தது வருகிறார்கள்.

இச்செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது.

தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து குற்றவாளிகளை தப்பவைக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள், உறுதியாக இருந்து வந்துள்ளன.

தமிழ் மக்கள், தமக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் நிலையில், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க, உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம் என்றார்.

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது. இதனையிட்டு தமிழ் மக்கள் ஆச்சரியம் அடையவில்லை. காரணம் தமிழ் மக்கள் இலங்கையிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவில்லை.

இலங்கை சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஐ.நா.வுக்கு வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதனை முடியாது என்று கூறுவது என்றால் தமிழ் மக்கள் விடயத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை சிந்தித்து பாருங்கள்.

கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது இலங்கையினால் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாது என்பது தெ ளிவாகின்றது.

சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படாமல், அவர்களின் அரசியல் உரிமை உறுதிப்படுத்தபடாமல் எந்தவொரு நல்லிணக்கமும் அடையப்பட முடியாது.

எனவே நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை திறக்க வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

Tags: Featured
Previous Post

பாடசாலைக்கு ஒரு நாளேனும் போக தவறாத இந்த மாணவியை சந்தியுங்கள்.!

Next Post

இருமுகன் படத்தை யார் வாங்கியுள்ளது தெரியுமா?

Next Post
இருமுகன் படத்தை யார் வாங்கியுள்ளது தெரியுமா?

இருமுகன் படத்தை யார் வாங்கியுள்ளது தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures