வட பகுதியில் முன்னெடுக்கப்படும் வெள்ள நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (28) கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் விசேட பணிப்புரை விடுத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (26) நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

