Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

December 27, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு கண்டாவளை மகாவிததியாலயத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிப்பொருட்களை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் தகாத வாரத்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையம் தடுத்து நிறுத்தியமை தொட்ரபில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைபபாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பம இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரை கைதுசெய்து நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான நிதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Previous Post

பிரதமர் ரணில் நாளை கிளிநொச்சி பயணம்

Next Post

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

Next Post

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures