நாட்டில் தற்போது கானப்படும் கட்டாலி நாய்களை அழிப்பதற்கான தடை உள்ளமையினால் நாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த கருத்தடை முறமை நடைமுறைப்படுத்தப்படுவதாக யாழ்ப்பாணம் கால் நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதன் ஆரம்பமாக கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தைச் சூழக் கானப்பட்ட 14 பெண் நாய்களிற்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன. தற்போது ஆளுநர் அலுவலகம் முன்பாக திரியும் நாய்களிற்கும் அதே சிகிச்சை வழங்குமாறு ஆளுநர் செயலகத்தினால் எம்மிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதனை 2019ல் மேற்கோள்ளத் திட்டமிட்டுள்ளோம் அதனை நிறைவு செய்தவுடன் குறித்த சேவை மாவட்டத்தின் ஏனைய பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்படுத்தி எதிர் காலத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றோம்.
தற்போது எமது திணைக்களத்திடம் நன்கு பயிற்றப்பட்ட வைத்தியர்கள் உள்ளதனால் இப் பணியை மேற்கொள்ள முடியும் . இதே நேரம் வளர்ப்பு நாய்களிற்கான தடுப்பூசிகளும் ஏற்றப்படுகின்றன. இருப்பினும் 2018இல் இப் பணியை மேற்கொள்ள போதிய நிதி கிடைக்கவில்லை. இந்த நிதியினை 2019இல் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது யாழ். மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 30 பேர் தெருநாய் கடிக்கு இலக்காகும் நிலையில் தினந்தோறும் அதிக விபத்துக்கு காரணமாகவும் தெருநாய்களே காரணமாக அமைந்துள்ளதனால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தரப்பில் இருந்து நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பும் நிலையில் அதிகாரிகள் முதல் மக்கள் பணி எனக்கூறும் அரசியல்வாதிகள் தாமும் தமது சூழலும் பாதுகாப்பதில் கவனமாக உள்ளனர்.
ஆனால் பாமர மக்கள் உள்ள பிரமேசத்தினை இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர். இதற்கு சில இடைநிலை அதிகாரிகளும் துணைபோவதும் வருத்தம் அளிப்பதாக விவசாயிகளும் மக்களும் தெரிவிக்கின்றனர்.

