யாழ். நகரின் பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக பறிக்கப்பட்டிருந்த மணலை இரஙு நேரம் ஓர் கண்டர் வாகனத்தில் களவாடிச் சென்றுள்ளனர்.
யாழ். நகரின் மத்தியில் உள்ள பிரபல பாடசாலையில் தற்போது இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக டிப்பர் வாகணத்தின் மூலம் பாடசாலையில் முன்னாள் இறக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறக்கப்பட்டிருந்த மணலை அவதானித்த சிலர் நேற்று அதிகாலை வேளையில் ஓர் கறுப்பு நிற கன்டர் ரக வாகனத்தில் வந்து மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சிலர் வாகனத்தில் திருட்டுத் தனமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளமை பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மறைகாணியில் தெளிவாக பதிவாகியுள்ளதனால் திருடர்கள் அகப்படும் சூழலே கானப்படுகின்றது.
தமது எதிர்காலச் சந்த்திக்காகவும் புண்ணிய காரியம் கருதியும் பலரும் பாடசாலைகளிற்கு அன்பளிப்புச் செய்யும் நிலையில் தமது சொந்த நலனிற்காக இவ்வாறான இழி செயலிலும் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

