இம்மாதம் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனால் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

