Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆட்சியைக் கைப்பற்றியே தீருவேன் – மகிந்த சபதம்

December 24, 2018
in News, Politics, World
0

அடுத்துவரும் ஒருவருடத்திற்குள் நாம் நினைத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

‘நல்லாட்சி என்று கூறிக்கொண்டு நாட்டினது பொருளாதாரத்தினை படுகுழிக்குள் தள்ளிய இந்த அரசாங்கத்தினால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனை மாற்றியமைக்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம். குறுகிய காலத்திற்குள் எம்மால் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இதனை நாம் எமது ஆட்சியில் நிரூபித்திருந்தோம். ஆனால் இன்று மக்கள் பல்வேறு சிக்கல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருவேளை உணவை மட்டும் உட்கொள்ளும் அளவிற்கு நாட்டு மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்திலும் பதவியிலுமே ஆசை இருக்கின்றது. ஆனால் நாட்டிலும் நாட்டினது அபிவிருத்தியிலும் எந்தவிதமான அக்கறையும் இவர்களுக்கு இல்லை.

நாம் நினைத்தால் ஒரு வருடம் கடப்பதற்குள் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

யாழில் கர்பிணிப்பெண்ணுக்கு ஏற்ப்பட்ட விபரீதம்

Next Post

செல்பியால் வந்த இன்னொரு வினை

Next Post

செல்பியால் வந்த இன்னொரு வினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures