சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்து, கடந்த டிச., 21ம் தேதி திரைக்கு வந்த படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடிக்க, சிவகார்த்திகேயனும் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி, விவசாயிகளின் கண்ணீர் கதையையும் சொன்ன இந்த கனா படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கனா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், கனவை நனவாக்கிய ஒவ்வொருத்தருக்கும் நன்றி. எங்களை நம்பி தியேட்டர்களுக்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. கண்ணீர், சிரிப்பு, கைதட்டல் என ஒவ்வொன்றையும் கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

