Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று தீர்வு

December 21, 2018
in News, Politics, World
0

பிரதான எதிர்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கவுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள  நாடாளுமன்றம் அமர்விலேயே இவ்விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும், எதிர்கட்சிகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.

இதனால் எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று இறுதி தீர்மானத்தை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

அமெரிக்காவில் பரிதாபமாக பலியான இலங்கை பெண்!

Next Post

கட்சி உறுப்புரிமை இல்லாமலாக்கப்படுவது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும்

Next Post

கட்சி உறுப்புரிமை இல்லாமலாக்கப்படுவது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures