Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் குழப்பங்களிற்கு நான் காரணமல்ல; பெரும்பான்மையை நிரூபிக்கலாமென மைத்திரிதான் இரகசிய வாக்குறுதி தந்தார்: மகிந்த!

December 11, 2018
in News, Politics, World
0

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். நீங்களே இதற்கு பொருத்தமானவர் என கூறி, பதவியேற்கச் சொன்னார்“
இப்படி கூறி, அரசியல் குழப்பத்திற்கான முழுமையான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் பக்கம் தட்டிவிட்டுள்ளார், சில வாரம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச எம்.பி.
வெளிநாட்டு ஊடகமொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்தார்.
2014இல் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதி தேர்தலில் எதிரணியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். ரணிலுடன் இணைந்து ஆட்சி நடத்தினார். சில மாதங்களின் முன்னர்தான் ரணிலின் உண்மை முகத்தை கண்டுகொண்டார். இதனால்தான் ஒக்ரோபர் 26ம் திகதி ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தினார்.
ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தப் போவதாக அவர் எமக்கு இரகசிய தகவலையும் அனுப்பியிருந்தார். நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மையை நிரூபித்து தருவதாகவும் கூறியிருந்தார். ஐ.தே.கவின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். இதை நம்பியே நான் பிரதமர் பதவியை ஏற்றேன். நான் அதனை கேட்டுப் பெறவில்லை. நான்தான் பொருத்தமானவன் என அவர்தான் கூறி, என்னை பதவியேற்கும்படி கேட்டார்.
துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எதிராக ஐ.தே.க நீதிமன்றத்திற்கு போள்ளது. பொதுத்தேர்தலிற்கு பயந்தே அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். நான் பிரதமராக பதவி வகிப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளார்கள். நீதிமன்றங்கள்இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளன.நான் அதை மதிக்கிறேன். நீதிமன்றங்களின் எத்தகையை கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். இப்போதைய அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்ற தேர்தலே சரியான தீர்வென்பது சாதாரண குடிமகனிற்கும் தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து. நான் நீதிமன்றங்களிற்கு அறிவுரை கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

Previous Post

வெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு சம்பந்தன் கொதிப்பு!

Next Post

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

Next Post

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures