Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிச்செல் புத்தகக் காட்சியில் திடீர் விருந்தினரான பாரக் ஒபாமா

November 21, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் புத்தக நிகழ்ச்சியில், அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பாரக் ஒபாமா ஒரு அழகிய பூங்கொத்துடன் முக்கிய விருந்தாளியாக கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மிச்செல் தனது புதிய நினைவுகூறலுக்கான புத்தக சுற்றுப்பயணத்தின் போது ஓபரா வின்ப்ரே, ட்ரேசி எல்லிஸ் ரோஸ் மற்றும் சிமமந்தா கோசி ஆதிச்சி உட்பட பல குறிப்பிடத்தக்க நபர்களுடனான அவரது வாழ்க்கை அனுபவங்களை பற்றி விவாதித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு, புத்தக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மிச்செல் முன்னாள் ஒபாமா வெள்ளை மாளிகை ஆலோசகர் வேலரி ஜெரட் உடன் ஒரு கலந்துரையாடலுக்காக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேப்பிடல் அரீனாவுக்கு சென்றார்.

கலந்துரையாடலின்போது மிச்செல் மற்றும் பாரக் உறவு பற்றி உரையாட ஆரம்பித்தபோது, விசேட விருந்தினர் விரைவில் மேடையில் வருவார் என்று ஜாரெட் பார்வையாளர்களுக்குத் தெரிவித்தார்.

அப்போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இளஞ்சிவப்பு மலர்க்கொத்துடன் வந்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ஜாரெட் பின்னர் அவர்களது உறவின் துவக்கத்தைப் பற்றி இருவரிடமும் கேள்வி எழுப்பினார். கடந்த 1989ம் ஆண்டு சிகாகோ சட்ட நிறுவனத்தில் சந்தித்தபோது மிச்செல், ஒபாமாவின் முதல் சந்திப்பை விவரிப்பதற்கு அவர்களைக் கேட்டுக்கொண்டார். மிச்செல் அப்போது ஒபாமாவுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்தார்

மிச்செல் மிகவும் தைரியமானவர் மற்றும் நேர்மையானவர். அவர் எப்போதுமே நம்பகத்தன்மையுடையவர் எனவும் பாரக் ஒபாமா கூறினார்.

Previous Post

அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட பிகாசோ ஓவியங்கள் 6 வருடங்களுக்கு பிறகு மீட்பு

Next Post

குடியுரிமைக்காக போலி திருமணம்: ஆஸ்திரேலியா எச்சரிக்கை

Next Post

குடியுரிமைக்காக போலி திருமணம்: ஆஸ்திரேலியா எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures