இந்த வருட இறுதிக்குள் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக குளிர்காலத்தில் 2 – 2.5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 1.7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.6 வீத வளர்ச்சியாகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

