ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாமல் குமாரவின் நண்பரான இந்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த சதி முயற்சி யார் யாருக்கிடையில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில், குறித்த இந்தியரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் மேலும் தெரிவித்துள்ளது.

