Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது மீண்டும் வரி விதிப்பு

September 19, 2018
in News, Politics, World
0
20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது மீண்டும் வரி விதிப்பு

சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட சீன பொருட்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கிறது.

இந்நிலையில், மேலும் 20,000 கோடி மதிப்பிலான (₹14.4 லட்சம் கோடி) சீன பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.  இது வரும் 24ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. மின்னணு பொருட்கள், சீன கடல் உணவுகள், மரப்பொருட்கள், விளக்கு, டயர், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து இது 25 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த ஆண்டு சீன பொருட்கள் மீது அமெரிக்கா ஜூலை மாதம் 3,400 கோடி டாலர் மற்றும் கடந்த மாதம் 1,600 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தது.

இதற்கு சீனா பதிலடி கொடுத்தது. தற்போதைய வரி விதிப்புக்கு சீனா மீண்டும் பதிலடி கொடுத்தால் 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், சீனா மீண்டும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

Previous Post

கேரளா வியாபாரிகள் வரத்தால் அச்சுவெல்லம் விலை உயர்வு

Next Post

நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்கு கொலு பொம்மை தயாரிப்பு மும்முரம்

Next Post

நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்கு கொலு பொம்மை தயாரிப்பு மும்முரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures