Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சி பார்த்து வீடுகள் கட்டிக் கொடுக்கவில்லை

September 18, 2018
in News, Politics, World
0

நான் மலையக சமூகத்தின் விடிவுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றேன். அந்த வேலைத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஒரு அங்குல நிலம் கூட கொடுக்காத தோட்டத்தொழிலாளிக்கு 7 பேர்ச்சர்ஸ் காணியுடன் சொந்த தனி வீட்டில் வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதற்கு நாம் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்.

ஆனால் நான் என்னதான் வேலை செய்தாலும் தேர்தல் காலங்களில் சோற்றுப்பார்சலையும் சாராயத்தையும் காட்டி மக்களை ஏமாற்றி விடுகிறார்கள். சோற்றுப்பார்சலுக்கும் சாராயத்துக்கும் சமூகத்தை மாற்றமுடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஒன்பதரை இலட்சம் ரூபாவும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஒருவீட்டிற்கு இரண்டரை இலட்சம் ரூபா செலவிலும் மொத்தம் ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள என்பீல்ட் தோட்டத்தில் ரூபாக்கொலை பிரிவில் 50 வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று ஒரு சிலர் சொல்கிறார்கள். நான் கட்சிபார்த்துதான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன் என்று. ஆனால் இன்று இங்கு வந்துள்ள ஏனைய கட்சிக்காரர்களுக்கு தெரியும் நான் அவ்வாறு செய்யவில்லை என்று. இதேநேரம் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் நிறைவுபெறவுள்ளது.

இதிலும் தொழிற்சங்கங்கள் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றத்தான் போகிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்காக கம்பனிகளுக்கு கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் 23ம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்கள் அனைத்தையும் மறந்து அணிதிரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கிய 40 பஸ்களுக்கு என்ன நடந்தது தொடர்பாக விசாரணை செய்யுமாறு இந்திய உதவி தூதுவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ராம், இந்திய கண்டி இந்திய தூதுவராலயத்தின் உதவி தூதுவர் திரேந்திரசிங் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Previous Post

தேசிய அரசை கலைத்து விட்டு மஹிந்தவை பிரதமராக்குங்கள்

Next Post

வடக்கில் 134 பேருக்கு நியமனம்

Next Post
வடக்கில் 134 பேருக்கு நியமனம்

வடக்கில் 134 பேருக்கு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures