Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருக்கோவில் மண்ணரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை

September 5, 2018
in News, Politics, World
0

திருக்கோவில் பிரதேச மண்ணரிப்பு தொடர்பில் பல தடவைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் பாராளுமன்றத்திலும் உயர் அதிகாரிகளிடமும் கூறிய போதும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்டவில்லை. இச்செயற்பாடு நல்லாட்சிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியதொன்றாகும் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்பாக கடல் நீர் உட்புகுந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) மாலை சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலமையினை ஆராய்ந்ததுடன் எடுக்கப்பட வேண்டிய தற்காப்பு நிலைகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், செகுடன் காதில் ஊதிய சங்குபோலவே எமது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி இவ்விடயத்தில் மௌனம் காப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு நகரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட் சிற்றி துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தாக்கமும் இதற்கு ஒரு காரணம் எனவும் கூறினார். கொழும்பில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் அரசாங்கம் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொணடார்.

குறித்த பிரதேசத்தில்கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) கடல் நீர் திடீரென உட்புகுந்து மண்ணரிப்பை ஏற்படுத்தியதுடன் ஆலயம் முன்பாகவுள்ள கொங்கிறீட் வீதியின் கீழ்ப்புறமாக பாரிய குழியையும் ஏற்படுத்தியது. இதனால் குறித்த வீதி சேதத்துக்குள்ளாகியதுடன் உடைந்து விழும் நிலைக்கும் தள்ளப்பட்டது.

மேலும் அருகில் இருந்த தென்னை மரங்களும் பாதிப்புக்குள்ளானதுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில் விடுமுறை தினமாக இருந்தபோதிலும் அவசரமாக ஒன்றிணைந்த திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனர்த்த மத்திய முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்போடு 500 மண் நிரப்பப்பட்ட மூடைகளை குறித்த பகுதியில் அடுக்கி பாதுகாப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.

இதேவேளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பாரிய கற்களை மண் வெளியேற்றப்பட்ட இடைவெளிக்குள் இட்டு வீதியை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆனாலும் கடலரிப்பு தொடருமானால் திருப்படை ஆலயமான பழம்பெரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள மதில் உடைந்து வீழ்வதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் வாழ்வதாரங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என அங்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Previous Post

ரன்ஜனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

Next Post

இலங்கை உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Next Post

இலங்கை உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்று நிரூபம்

July 15, 2026
“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

July 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures