Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை

September 4, 2018
in News, Politics, World
0

ரொஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரித்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கும் தேசிய இரகசிய சட்டம் ஒன்றின் கீழ் மியன்மார் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி கொடுத்த உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்திருந்ததற்காகவே வா லோன் மற்றும் கியாவ் சோ லூ இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், “தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய இரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இது பொலிஸாரால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் தாம் நிரபராதிகள் என்றும் இந்த இருவரும் தொடர்ந்து கூறிவந்தனர். இந்த வழக்கு விசாரணை மியன்மாரில் ஊடக சுதந்திரம் பற்றிய கேள்வியை எழுப்பி வந்தது.

“நான் பயப்படவில்லை” என்று இந்த இரு ஊடகவியலாளர்களில் ஒருவரான வா லோன் இந்த தீர்ப்பை பற்றி குறிப்பிட்டார். “நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நம்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்” என்றும் அவர் முன்னதாக கூறி இருந்தார்.

இந்த இருவரும் வடக்கு ரகைனின், இன் டின் கிராமத்தில் 10 ரொஹிங்கிய ஆண்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதன் ஆதாரங்களை சேகரித்தவர்களாவர்.

ரோய்ட்டர்ஸ் தரும் தகவல்களின்படி, ரோஹிங்கிய ஆண்கள் சிலர், கடற்கரையோரம் அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். அங்கு, அவர்களில் இருவரை பெளத்த கிராம மக்கள் கொன்றிருப்பதோடு ஏனையோர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவை நடந்தது கடந்த செப்டம்பர் மாதம்.

இந்த விசாரணைகளின் போது இவர்களுக்கு ஆவணங்களை வழங்க இரு பொலிஸ் அதிகாரிகள் முன்வந்தனர். அந்த ஆவணங்கள் வழங்கப்பட்ட விரைவிலேயே கடந்த 2017 டிசம்பரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரு ஊடகவியலாளர்களும் டிசம்பர் மாதம், இரண்டு பொலிஸாருடன் விருந்துக்கு சென்றுள்ளனர். அங்குதான் இவர்களுக்கு பொலிஸார் இந்த படுகொலை குறித்த ஆவணத்தை வழங்கியுள்ளனர்.

பின் அந்த உணவகத்திலிருந்து புறப்பட்ட உடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரக்கைன் மாநிலம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்புடைய முக்கியமான மற்றும் ரகசியமான அரசு ஆவணங்களை வைத்து இருந்தார்கள். இதனை வெளிநாட்டு ஊடகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இது முழுக்க முழுக்க பொலிஸால் ஜோடிக்கப்பட்டது என்று இந்த ஊடகவியலாளர்களின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் படுகொலை செய்தியை வெளியே கொண்டுவந்தார்கள். அதற்காக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரோய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர், “மியன்மாருக்கும், அதன் ஊடக சுதந்திரத்திற்கும் இன்று ஒரு மோசமான நாள்” என்றார்.

ரொஹிங்கிய ஆயுத கும்பல் ஒன்று பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த நெருக்கடியானது பல காலம் அங்கு நீடித்தது.

இராணுவம் ரோஹிங்கியர்களுக்கு எதிராக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ரக்கைன் மாநிலத்திற்கு செல்லும் ஊடகங்களை இராணுவம் கடுமையாக கண்காணிப்பதால் அந்த பகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை பெறுவது கடினமான காரியமாக உள்ளது.

Previous Post

சீனாவில் 38 ஆயிரம் பன்றிகள் ஒரே நாளில் கொன்று குவிப்பு

Next Post

மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி

Next Post

மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures