பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மெக்சிகோ அணி வீரர்கள், ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், பாலியல் தொழிலாளர்களுடன் மெகா விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகி உள்ளது. பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்குகிறது.
உலகக் கோப்பையை வெல்வதற்காக 32 நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு களமிறங்க உள்ளன. வட அமெரிக்க நாடான மெக்சிகோ, எப் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஸ்வீடன், தென்கொரியா ஆகிய அணிகளுடன் பட்டியலில் உள்ளது.
இதுவரை உலகக் கோப்பையில் காலிறுதிக்கு மேல் தாண்டாத மெக்சிகோ அணி, இந்த முறை எப்படியும் கோப்பையை கைப்பற்றுவோம் என தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், மெக்சிகோ அணி வீரர்களுக்கு அந்த நாட்டின் கால்பந்து சங்கம் சார்பில் மிகப்பெரிய விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள 9 வீரர்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் இந்த விருந்தை கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மறுநாள் இது குறித்த செய்திகள் மெக்சிகோ நாட்டு பத்திரிகைகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்த செய்திகள் வெளியான பிறகு அன்றைய தினம் ‘பிரீ’ தினமாகும். எனவே, வீரர்கள் பிரீயாக இருந்துள்ளனர்.
இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று, மெக்சிகோ கால்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது. மேலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்கள்.
இது அவர்கள் ஓய்வு நேரத்தில் நடந்துள்ள சம்பவம். இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என மெக்சிகோ கால்பந்து சங்கத் தலைவர் கிலீர்மோ காண்டு தெரிவித்துள்ளார்.
இது போன்று பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் கால்பந்து வீரர்கள் சிக்குவது என்பது மெக்சிகோவுக்கு புதிதல்ல.
கடந்த 2010ல் ஒரு போட்டியில் பெற்ற வெற்றியை இதுபோன்றுதான் மெக்சிகோ வீரர்கள் கொண்டாடினர். அப்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தவிர இரண்டு பேருக்கு 6 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல் 2011 ஜூனில், கோபா அமெரிக்கா போட்டியில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றபோதும், இதுபோல் மெக்சிகோ வீரர்கள் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாத காலம் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் மெக்சிகோ அணி சிக்கியுள்ளது உலக அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
.