Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காசி விஸ்வநாதர் கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

May 18, 2018
in News, Politics, World
0

நெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரைப் பத்திரமாகத் தரைக்கு அழைத்து வந்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சாரலுக்குப் பெயர் பெற்ற குற்றாலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில் எப்போதும் சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருக்கும். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கான நுழைவு வாயிலாக அமைந்திருக்கும் பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்குள் நுழையும்போதே மூலிகை மணம் வரவேற்கும்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், காசி ஆலயத்துக்கு நிகரான சிவத்தலமாக விளங்குகிறது. அதனால் இந்தக் கோயிலில் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அத்துடன், சிசிடிவி கேமரா கண்காணிப்பும் உள்ளது. இத்தகைய கடுமையான பாதுகாபையும் மீறி, இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் எதற்காகக் கோபுரத்தின்மீது ஏறினார் என்பது தெரியாததால், காவல்துறையினர் தடுமாறினார்கள். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபுரத்தின்மீது நின்ற இளைஞரிடம் பேச்சுக் கொடுத்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் அவரைப் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்திருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோயில் கோபுரத்தின்மீது ஏறியவர், தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் என்ற 29 வயது இளைஞர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பை மீறி ஒருவர் ராஜகோபுரத்தின்மீது ஏறிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous Post

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்

Next Post

விருதுநகரில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

Next Post

விருதுநகரில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures