Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு

April 3, 2018
in News, Politics, World
0

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாகியுள்ளதால், பிரதமர் மோடியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று காலை சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவசர அழைப்பினை அடுத்து டெல்லியிலுள்ள பிரதமரைச் சந்திப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றவர் இன்று காலை 11. 30 மணியளவில் பிரதமர் மோடியை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக கவர்னர் அறிக்கை ஒன்றை மோடியிடம் வழங்கினார். நேற்று முன் தினம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறைச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரை ராஜ்பவனுக்கு அழைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு விவகாரங்களை கேட்டார். அப்போது டிஜிபி ராஜேந்திரனிடம் தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்கள் என்ன மாதிரியாக இருக்கிறது என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக உள்ளது. நாங்கள் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியவர் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் இதற்கு அனுமதி கேட்டால் உடனே கொடுக்க வேண்டும், எந்த காரணம் கொண்டும் அனுமதி மறுக்க கூடாது.

அப்படியே அனுமதி கேட்காமல் போராட்டத்தில் குதித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திடக் கூடாது.

அதுவே ஆளும் அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி விடும். அதனால் போராட்டம் நடத்துறவங்களுக்குத் தேவையான பாதுகாப்பை மட்டும் கொடுங்க.

கைது செய்யும் சூழல் வந்தாலும் மிக கண்ணியமாக நடந்து கொள்ளவும், பொதுமக்கள், மாணவர்கள் என யார் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்கள் யாரையும் தடுக்க வேண்டாம், எந்தக் காரணம் கொண்டும் வன்முறையாகி இருக்க கூடாது என முதல்வர் கூறியதை கூறியுள்ளார்.

இதை கவனமாக கேட்டுக் கொண்ட ஆளுநர் அடுத்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதனிடம் அரசு அதிகாரிகள் தரப்பில் இந்த பிரச்னை குறித்து என்ன பேசிக் கொள்கிறார்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த விவகாரத்தில் தமிழக அதிகாரிகள் மட்டும் தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் மற்ற மாநில அதிகாரிகள் வழக்கம் போல மவுனமாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மாவட்டங்களில் நடக்கும் பிரச்னைகள் மட்டும் கொஞ்சம் தீவிரமடைந்து வருவதாக கூறியுள்ளார். இவர்களை அழைத்துப் பேசுவதற்கு முன்னதாக கவர்னர் மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவரை அழைத்துப் பேசியுள்ளார். அவரிடம் தமிழகத்தில் எந்த எந்தமாவட்டங்களில் போராட்டம தீவிரமாக உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என கேட்டுள்ளார், தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக அணைத்து மாவட்டத்திலும் விவசாயிகள், மாணவர்கள்,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் , அனைத்து தொழிற் சங்கங்கள் உள்பட அனைத்து அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள்.

குறிப்பாக பாஜக மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் பாஜகவினை சேர்ந்த கட்சியினர் பொதுவெளியில் செல்ல தயங்கி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

போராட்டத்தின் தன்மை அதிகமாகி இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல அணைத்து மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் பரவலாம் இதற்கு அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். முக்கியமாக இந்த விவகாரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் ஒரே பாதையில்தான் செல்கிறது.

மக்களுக்கு பயந்து வெளியே வந்து போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டனர் என கூறியுள்ளார். மக்கள் அரசியல் கட்சிகளை நம்ப தயாராக இல்லை ஆதலால் அவர்களே வீதிக்கு வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதை அனைத்தும பொறுமையாக கேட்டுக்கொண்ட ஆளுநர் ஒவ்வொன்றையும் ஆளுநர் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் தற்போது நடக்கு போராட்டம் மற்றும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றும் ஆளும் கட்சியின் மூவ் என அனைத்தையும் 30 பக்கத்தில் அறிக்கையாக தயார் செய்துள்ளார், அந்த அறிக்கையில் குறிப்பாக தமிழத்தில் பாஜகவிற்கு மிக மோசமான பெயர் உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் மிக மோசமாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அது அப்படியே வாட்ஸ் அப் டிவிட்டர் பேஸ் புக் என அணைத்து பக்கங்களிலும் பரவியுள்ளது.

இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள், தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என அணைத்து மட்டங்களிலும் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக நம்பி இருக்கிறார்கள். இந்த மன நிலையில்தான் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகள் இப்போது களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இது போன்ற குந்தக செயல்களை உடனடியாக களைய வேண்டும் என மிகக் காட்டமாக அறிக்கையாக 5 கோப்புகளாக தயார் செய்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழக கவர்னர் இன்று பிரதமரைச் சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, அரசியல் சூழல் குறித்த அவரது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அதன் பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழக தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநர் அனுப்பிய அறிக்கைக்கு என்னமாதிரியான முடிவினை மத்திய அரசு எடுக்கப்போகிறது என மிக விரைவில் தெரிந்து விடும். இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கினை தமிழக ஆளுநர் சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Previous Post

மகாராஷ்டிராவில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து

Next Post

உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

Next Post
உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures