பிரதமரின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நேற்று (02) இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டத் தொடர்ச்சி இன்றும் (03) இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விளக்கிக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, இன்னும் பல தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்ததன் பின்னர் இன்றைய தினமும் ஐ.தே.கட்சியின் அமைச்சர்களுடன் பேசுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் தற்போதைய புதிய முன்னெடுப்புக்கள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கிக் கூறியதாகவும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளரும் அமைச்சருமான கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.