Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள் : எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்

February 7, 2018
in News, Politics, World
0

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் பிரிட்­ட­னில் நிரந்­த­ரக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கின்­றார். இங்கு ஏதா­வது பிரச்­சினை என்­றால் அங்கு ஓடி­வி­டு­வார். ஆனால் அவர்களின் குழப்­பி­ய­டிக் கும் வேலை­க­ளால் பாதிப்­ப­டை­யப்­போ­வது என்­னவோ, இங்­குள்ள தமிழ் மக்­கள் ­தான்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வட­ம­ராட்­சி­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ர­னின் தம்பி கடத்­தப்­பட்ட போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் ஓடி­போய் கடத்­தப்­பட்ட சகோ­த­ரனை கஜேந்­தி­ரன் மீட்டு வந்­தார். ஆனால் ஊரான் வீட்­டுப் பிள்­ளை­கள் வெள்ளை வானில் கடத்­தப்­பட்­டார்­கள். அப்­போது கடத்­தப்­பட்­ட­வர்­களை காப்­பற்ற என்ன செய்­தார்­கள்.

வடக்கு மாகாண சபைத் தேர்­தல் இடம்­பெற்­றி­ருந்த வேளை அத­னைப் புறக்­க­ணித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் இப்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் ஆத­ரவை எதிர்­பார்த்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது.

அவர்­கள் கூறி­யி­ருந்­தது போல நாங்­க­ளும் மாகாண சபை தேர்­தலை நிரா­க­ரித்து இருந்­தால் எமக்­கான முதல்­வர் கிடைத்­தி­ருக்க மாட்­டார். நாம் மாகாண சபைத் தேர்­தலை நிரா­க­ரித்து இருந்­தால் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த வெற்­றி­லைக்­கா­ரர்­கள், யானைக்­கா­ரர்­கள் இங்கு முதல்­வ­ராக வந்­தி­ருப்­பார்­கள்.

நாம் மாகாண சபை தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைந்­த­மை­யால் மாகாண சபை­யில் இனப்­ப­டு­கொலை தீர்­மா­னத்தை நிறை­வேற்றி இருந்­தோம்.

2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­லில் போர் உச்­சக்­கட்ட நிலை­யில் இருந்­த­போது மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­னு­டன் கஜேந்­தி­ர­கு­மார் பேசி இடைத்­த­ர­கர் வேலை பார்த்து பின்­னர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கிய உறுப்­பி­னர்­கள் புலித்­தே­வன், நடே­சன் போன்­ற­வர்­கள் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் சர­ண­டைய சொன்­னீர்­கள். அவர்­க­ளும் வெள்­ளைக் கொடி­யு­டன் சர­ண­டைய வந்­தி­ருந்­தார்­கள்.

அவ்­வாறு சர­ண­டைய வந்­த­வர்­கள் கொடூ­ர­மாக படு­கொலை செய்­யப்­பட்­டார்­கள்.அப்­போது நீங்­கள் என்ன செய்­தீர்­கள்?. இந்த கொடூ­ர­மான விட­யத்தை பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு உட­ன­டி­யாக தெரி­வித்­தி­ருக்க வேண்­டும். எப்­போ­தா­வது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு இதைப் பற்­றிக் கூறி­யி­ருக்­கின்­றீர்­களா?.

கஜேந்­தி­ர­கு­மார் அதைச் ஒரு சில நாடு­க­ளுக்கு கூறி­ய­னார் என்று சொல்­லி­வ­ரு­கின்­றார். அது­வும் உண்­மையா? இல்­லையா? என்று கட­வு­ளுக்­குத்­தான் தெரி­யும்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் தமிழ், சிங்­கள, ஆங்­கில மொழி ஊடாக இங்கு நடந்த இனப் படு­கொலை தொடர்­பாக ஏதா­வது சாட்­சி­யங்­கள் இருந்­தால் தாருங்­கள் என்று கோரி­யி­ருந்­தார்­கள். அப்­போது நீங்­கள் எத்­தனை சாட்­சி­யங்­களை வழங்­கி­னீர்­கள்?.

நீங்­கள் எது­வும் கொடுக்­காது சும்மா இருந்­தீர்­கள். ஆனால் நானும் சில மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் இணைந்து பல சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தோம். ஒரு பக்­கக் கட­தா­சி­யி­லா­வது இங்கு இனப்­ப­டு­கொலை நடந்­தது என்று சாட்­சி­யம் வழங்­கி­யி­ருக்­கின்­றீர்­களா?.

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள். இது­வரை காலத்­தில் மகிந்த பத­வி­யில் இருந்த போது இங்கு இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என்று தைரி­ய­மாக எப்­போ­தா­வது கூறி­யி­ருக்­கின்­றீர்­களா?. எனக்­கும் மக்­க­ளுக்­கும் தெரி­யும். நீங்­கள் ஒழித்து விளை­யாடி வரு­கின்­றீர்­கள்.

இலங்கை போர்க்­குற்­றம் தொடர்­பாக பன்­னாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­நாட்டு விசா­ரணை என்று மாற்­றம் செய்து தீர்­மா­னம் வந்­த­போது நாம் அதனை ஆத­ரித்­தோம். அப்­போது எம்மை துரோ­கி­கள் என்­ற­வர்­கள் நீங்­கள் என்ன செய்­தீர்­கள்?.

பேரா­சி­ரி­யர் சொர்­ண­ரா­ஜாவை நாம் சந்­தித்த போது, அவர் எங்­க­ளி­டம் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 30ஃ1 தீர்­மா­னத்­தின் ஊடா­கவே நாம் பன்­னாட்டு விசா­ர­ணையை செய்ய முடி­யும் என்று கூறி­னார். அப்­போது சந்­திப்­பில் இட­து­பக்­கம் என்­னு­டன் இருந்த சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை நான் பார்த்த போது அவர் மறு பக்­கம் திரும்­பி­னார். மற்­றப் பக்­கம் இருந்த கஜேந்­தி­ர­கு­மாரை நான் திரும்பி பார்த்த போது அவர் அடுத்த பக்­கம் பார்த்­தார்.

நான் வெளிப்­ப­டை­யா­கக் கேட்­கின்­றேன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் தலை­வர் சம்­பந்­த­னும் ஐ.நாவின் 30ஃ1 தீர்­மா­னத்­திணை ஏற்­றுக் கொண்­டமை துரோ­கத்­த­னமா அல்­லது நீங்­கள் செய்­தது துரோ­கத்­த­னமா? என்று கூறுங்­கள் – என்­றார்.

Previous Post

கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யின் தகமை என்ன : ந.சிறீ­காந்தா.

Next Post

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம்

Next Post

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures