அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரை பகுதியில் கடமையான பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது. இதனையடுத்து அலாஸ்கா, கனடா, மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.













