Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டிரம்பின் அறிவாற்றல் பிரமாதம் : அமெரிக்க அரசு டாக்டர் சான்று

January 18, 2018
in News, Politics, World
0

”அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 71, உடல்நிலை பிரமாதமாக உள்ளது; புரிந்து கொள்ளும் அறிவாற்றல் சோதனையில், அவர் சிறப்பாக தேறி உள்ளார்,” என, வெள்ளை மாளிகை சிறப்பு மருத்துவர், ரான்னி ஜாக்சன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர், டிரம்பின் நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் ஆகியவை குறைந்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகின. இதனால், டிரம்பின் உடல் நிலை பற்றி, பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், டிரம்ப், நேற்று, வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பின், அவரை பரிசோதித்த, வெள்ளை மாளிகை சிறப்பு மருத்துவர், ரான்னி ஜாக்சன், நிருபர்களிடம் கூறியதாவது: அதிபர் டிரம்பின் உடல்நிலை சிறப்பானதாக உள்ளது. புரிந்து கொள்ளும் அறிவாற்றல் சோதனையில், அவர் சிறப்பாக தேறி உள்ளார். மிக ஆரோக்கியமாக உள்ள அவர், அதிபர் பதவிக்கான காலம் முழுவதும் அவ்வாறே திகழ்வார்.
புரிந்து கொள்ளும் சோதனையை, தன்னிடம் நடத்தும்படி, மருத்துவர்களிடம், டிரம்ப் கேட்டுக் கொண்டார். சட்டப்படி, அந்த சோதனையை அதிபரிடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவர் கேட்டுக் கொண்டதால், புரிந்து கொள்ளும் திறன் சோதனை நடத்தப்பட்டது. இதில், 30க்கு, 30 மதிப்பெண் பெற்று, சிறப்பான தேர்ச்சியை டிரம்ப் அடைந்துள்ளார்.
புரிந்து கொள்வதில், டிரம்பிடம் எவ்வித குறைபாடுகளையும், நான் காணவில்லை. டிரம்ப், மிகவும் புத்திக்கூர்மையாக உள்ளார். என்னிடம் பேசுகையில், தெளிவாக புத்தி சாதுரியத்துடன் பேசினார். 2017 டிசம்பரில், ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில், டிரம்ப் பேசுகையில், வாய் குழறியபடி பேசியதாக தோன்றியது. சுவாசம் சீராவதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து, அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

திறமையான தொழிலாளர்களை ஏற்பதில் தயக்கம் இல்லை : ‘திறமையானவர்களை, ஆங்கிலம் சிறப்பாக பேசக் கூடியவர்களை, அமெரிக்காவில் வசிக்க அனுமதிப்பதில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, எந்த பிரச்னையும் கிடையாது’ என, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.வாஷிங்டனில், அமெரிக்க அரசு மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அமெரிக்க நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய திறமையான நபர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்வதில், அரசுக்கு தயக்கம் கிடையாது. அவர்கள், சிறப்பான தொழில் திறனுடனும், ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்தால், அவர்கள் அமெரிக்காவில் வசிக்க எவ்வித தடையும் இருக்காது.
அமெரிக்க மக்கள் நலனை கருதி, குடியேற்ற நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்ய அரசு விரும்புகிறது. தனிநபர்களின் திறன் அடிப்படையில் அவர்களை, அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் நடைமுறை, சிறப்பான பலன்களை அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

நான்கு வருடங்களின் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!!

Next Post

மியான்மரில் கலவரம் : ஏழு பேர் பலி

Next Post

மியான்மரில் கலவரம் : ஏழு பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures