Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது- ஜனாதிபதி

December 28, 2017
in News, Politics
0
தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது- ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ வெளியிட்டுவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஊழல் மோசடியில்லாத தூய ஆட்சிக்கான ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களிடம் ஜனாதிபதி அவர்களினால் கையளிக்கப்பட்டது.

தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

நேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்ததோர் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாயிலை இந்த தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் செய்யும் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்க முடியாது. அவர்களிடம் இருக்க வேண்டியது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்திற்கான பொது நிகழ்ச்சி நிரலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலை தொகுதி முறையில் நடாத்துவதற்கு கிடைத்தமை பெரும்வெற்றியாகும் என்றும் இதன் மூலம் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்காக அரசாங்கத்திற்குள்ளும் எதிர்க்கட்சிக்குள்ளும் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டி இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியால் வெளியிடப்பட்ட ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ நாட்டினதும் தேசத்தினதும் இன்றிருக்கின்ற மற்றும் நாளை பிறக்கவிருக்கின்ற தலைமுறையின் எதிர்காலத்திற்கான உடன்படிக்கையாகும் என குறிப்பிட்ட ஜனாபதிபதி அவர்கள், சிறந்த எதிர்கால அரசியல் நோக்கும், தூய அரசியல் இயக்கத்திற்கு தேவையான ஆட்களும் நாட்டில் கட்டியெழுப்பப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணி தேர்தல் சட்டதிட்டத்திற்கு ஏற்ப வன்முறையற்ற, முன்மாதிரியான தேர்தலுக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இது சிறந்த உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்களுக்கு வழங்கும் செய்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உடன்படிக்கை குறித்த உறுதிமொழி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டதுடன், அனைவரும் இணைந்து அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Previous Post

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Next Post

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

Next Post
அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures