Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

20 சதவீத வாக்குகளைக் குறிவைக்கும் விஷால்?

December 2, 2017
in Cinema, News, Politics, World
0

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடப் போகிறார் என்ற தகவல், ஆளும்கட்சி தரப்பை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ‘ தொகுதிக்குள் பெருகியிருக்கும் தலித், தெலுங்கு வாக்குகளைக் குறிவைத்துக் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். அரசியலில் விஜயகாந்த் போல, தனக்கான இடத்தை அவர் தேர்வு செய்ய இருக்கிறார்’ என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவோடு களம் இறங்குகிறார் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ்.

அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். தினகரன், தீபா ஆகியோர் தனித்துக் களம் இறங்க உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஷால் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து பேசிய விஷால் ஆதரவாளர் ஒருவர், ” நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை அடுத்து நேரடி அரசியலில் களம் இறங்க நினைக்கிறார் விஷால். நடிகர் விஜய் போல அரசு ஆதரவு நிலையில் இருந்து அரசியலில் நுழைய அவர் விரும்பவில்லை. கமல் போல எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்க நினைக்கிறார். இதன்மூலம் தனக்கான அரசியல் இமேஜை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்.
ஆர்.கே.நகரில் வெற்றி கிடைப்பதைவிடவும் பெருவாரியான வாக்குகளை வாங்கினால், மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மதிப்பீடு உயரும் எனக் கணக்கு போடுகிறார். ஆர்.கே.நகர் முழுக்க 20 சதவீதமான தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். இதுதவிர, தலித், மீனவ மக்களும் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறார்.
நாம் வேட்பாளராக நின்றால், ஆளும்கட்சி இணையான வாக்குகளைப் பெறலாம்’ எனத் திட்டம் வகுத்திருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போல, அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார். ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விஜயகாந்த் விலகியிருப்பதால், தன்னுடைய தலைமையை மக்கள் ஏற்பார்கள் எனவும் கணக்குப் போடுகிறார். அதன் தொடக்கமாக ஆர்.கே.நகர் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார். அவர் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை” என்றார்.

Previous Post

உதகையில் பழமை வாய்ந்த வணிக வளாகம் இடிந்ததில் 3 பேர் படுகாயம்

Next Post

ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் வரவழைப்பு

Next Post

ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் வரவழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures