Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி எழுதிய நூல்.

December 2, 2017
in News, Politics
0
பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி எழுதிய நூல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.
தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.

அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன்.
வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன்.
எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன்.

அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.

அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன்.
வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள்.

புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.
அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு மொண்டேன்.

”சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது” என உடனடியாகவே அவருக்கு கூறினேன்.

சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் “ #பிரபாகரன்_எங்கே?” எனக்கேட்டார்.” சேர், பிரபாகர்ன், பொட்டு அம்மான்,சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது” என பதிலளித்தேன். ”#பிரபாகரன்_இறக்கவில்லை என்றால் #போரும்_முடிந்து_விடவில்லை” என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக்கூறினார்.

அவர் சரியாகத்தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன். புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை.

அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. “ சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம்.

இப்போது அந்த சதுப்பு நில பற்றைக்காடுகளுக்கு இருள தொடங்கிவிட்டது” என அவருக்கு பதிலளித்தேன்.
போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டதது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டிருந்தது.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர்.

தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது.
பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் எனது உறக்கம் “#பிரபாகரன்_எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது.

பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.
அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும்.
ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன.

இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்.
இன்னும் தொடர்கின்றது பிரபாகரன் என்ற மர்மம்…..
-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண(இலங்கை ராணுவ கட்டளை தளபதி) ( Road to Nandikkadal)

Previous Post

ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்.

Next Post

காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

Next Post
காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures