Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதற்கு ஸ்டாலின் வரவேற்பு!

July 27, 2017
in News, World
0

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமின்றி, இந்த தடை நீக்கம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே கருதுகிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து முடக்கி வரும் இலங்கை அரசு இந்த தடை நீக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

போரின் போது காணாமல் போன தமிழர்களை அடையாளம் காணுவது, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றி அந்த நிலங்களை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பது, மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பது, ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

ஐரோப்பிய யூனியனே தடையை நீக்கியிருக்கின்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய யூனியன் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் நல்லெண்ணத்தை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் வாழ்வை சூழ்ந்துள்ள காரிருளை நீக்க மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் நியாயமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் விரும்பும் நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Post

குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி!

Next Post

தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post
தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures