Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி : பன்னீரின் கனவு கலைந்தது?

February 17, 2017
in News
0
தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி : பன்னீரின் கனவு கலைந்தது?

தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி : பன்னீரின் கனவு கலைந்தது?

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்தியாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுவதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை 4.10 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 3ஆவது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி இதுவாகும்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்து, அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார்.

ஆனால் நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார்.

சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்

இன்று முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையினால் பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் தர்மம் மறுபடியும் வெல்லும். தர்ம யுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குழப்பமான நிலை இருந்தது, உடனடியாக ஆட்சி அமைய திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆளுநரை சந்தித்தும் எடுத்து கூறியிருந்தோம். இந்நிலையில் ஆளுநரின் அறிவிப்பு காலம் கடந்து வெளியிட்டாலும் உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

15 நாட்களுக்குள் என்பது பெரிய அவகாசம், இது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை . இதற்குள் பல குதிரை பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதும் நடக்காமல் ஆளுநர் பார்த்து கொள்ள வேண்டும்.

ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: brakeing newsFeatured
Previous Post

ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கிய வாக்குறுதி

Next Post

ஆளுநரின் அதிரடி உத்தரவு: ஆவேசத்துடன் சபதம் எடுத்த ஓ.பன்னீர் செல்வம்

Next Post
ஆளுநரின் அதிரடி உத்தரவு: ஆவேசத்துடன் சபதம் எடுத்த ஓ.பன்னீர் செல்வம்

ஆளுநரின் அதிரடி உத்தரவு: ஆவேசத்துடன் சபதம் எடுத்த ஓ.பன்னீர் செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures